தமிழகத்தின் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும், மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் நேரில் சென்று ஆய்வு செய்யவேண்டும். பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் சரியான முறையில் உள்ளனவா? விடுதிக் கட்டடங்கள், தீ தடுப்பு ஏற்பாடுகள் உரிய அனுமதி பெற்று உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. மேலும் மாணவர்கள் தங்கி படிக்கும் பள்ளி கட்டடங்கள் உரிய அனுமதி பெற்றுள்ளனவா? என்பதையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கு பிறகு பள்ளிகள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் இதுபோன்ற ஆய்வை நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, பள்ளிக்கல்வித்துறை நேற்று (ஜூலை மாதம் 24ஆம் தேதி) சில அறிவிப்புகளை வெளியிட்டு இருந்தது. அதில், நேற்று ஆசிரியர்கள் பள்ளியில் நடந்து கொள்ளும் முறைகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை வெளிட்டது. அந்த வரிசையில், தனியார் பள்ளிகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என தற்போது உத்தரவிட்டுள்ளது.