கார்த்தி நடிப்பில், பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சர்தார்’ திரைப்படம் கடந்த வாரம் திரையரங்கில் வெளியானது. இந்த திரைப்படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை லைலா, வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் சங்கி பாண்டேவை, ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன், யூடியூப் பிரபலம் ரித்விக் ஆகியோர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கும் இந்த படத்தை எஸ். லஷ்மண் குமார் தயாரித்துள்ளார். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் இந்த திரைப்படத்தை வெளியிட்டது. இந்த நிலையில், சர்தார் படத்தின் இரண்டாம் பாகத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் விடியோ காட்சி ஒன்றின் மூலம் அறிவித்துள்ளது. முன்னதாக, தீபாவளியை முன்னிட்டு வெளியான இந்தப் படம் இதுவரை ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.