அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி வரும் 29ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்தப்போட்டியில் இந்தியாவின் சானிய மிர்சா பங்கேற்க இருந்தார். இதற்கிடையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் கனடா போட்டியின்போது ஏற்பட்ட முழுங்கை காயம் காரணமாக அமெரிக்க ஓபன் விளையாடப்போவதில்லை என்ற அறிவிப்பை அவர் தனது சமூகவலை தளப் பதிவில் தெரிவித்துள்ளார். 35 வயதாகும் சானியா இந்த சீசனுடன் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த நிலையில், தற்போதையை விலகல் காரணமாக ஓய்வு திட்டத்தில் மாற்றம் ஏற்படலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.