சென்னையை சேர்ந்த நடிகை சமந்தா விளம்பர படங்களில் நடித்து மாடலிங் துறையில் நுழைந்து, அங்கு இருந்து “மாஸ்கோவின் காவிரி” திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகி இருந்தாலும், ”ஏ மாய சேசாவே” என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடிகர் நாக சைதன்யாவுடன் இணைந்து நடித்ததின் மூலமே பிரபலமானார். இதுவே இவரின் முதல் டோலிவுட்டில் எண்ட்ரியாகும். எனினும், அன்று தொடங்கிய சமந்தா, நாக சைதன்யா இணைப்பு, இருவீட்டார் சம்மதத்துடன் 2017ஆம் ஆண்டு திருமணம், பின்னர் 2021ஆம் ஆண்டு கருத்து வேறுபாடுகள் காரணமாக விவாகரத்து செய்வதாக அறிவித்ததில் முடிந்தது. இதனால், சிறிது காலம் ஓய்வில் இருந்த சமந்தா அதையடுத்து, மீண்டும் புத்துணர்ச்சியுடன் தன் துள்ளளான நடிப்பால் ரசிகர்களை ஈர்த்து வருகிறார். இந்த நிலையில், தமிழில் பிரபல தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியான ’காபி வித் டிடி’ போல, இந்தியில் இயக்குநர் கரண் ‘காபி வித் கரண்’ என்ற நிகழ்ச்சியின் 7ஆவது சீசன் நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் பிரபலங்கள் கலந்து கொண்டு கரணின் கேள்விகளுக்கு பதிலளிப்பார்கள், அந்த வரிசையில், இந்த முறை நடிகர் அக்ஷய் குமார் மற்றும் சமந்தா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இதில், கரண் ஜோஹர் கணவர் நாக சைதன்யா பிரியும்போது, உங்கள் மனநிலை எப்படியிருந்தது? என்று கேட்டார். அப்போது, இடைமறித்த சமந்தா அவர் என்னுடைய கணவர் அல்ல, முன்னாள் கணவர் என்று கூறுங்கள் என தெரிவித்தார். மேலும் விவகாரத்து செய்வது எளிதல்ல, அந்த அளவிற்கு இருவருக்கும் வார்த்தை போர் மூண்டது என தெரிவித்துள்ளார். மேலும், நாக சைதன்யா தனக்கு நல்ல கணவராக இல்லை என கூறியதுடன் மேலும் கடுமையான வார்த்தைகளால் அவரை விமர்சனம் செய்தார். இருவருக்கும் நடந்த திருமண வாழ்க்கை சண்டை வாழ்க்கையாகவே இருந்தது எனவும் கூறியுள்ளார். முன்னதாக இந்த நிகழ்ச்சிக்கான முன்னோட்டத்தில் நிகழ்ச்சி அரங்குக்கு சமந்தாவை அக்ஷய் குமார் தன் கையில் தூக்கிய படி நுழைந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாது. அதனைத்தொடர்ந்து சமந்தாவின் முன்னாள் கணவர் குறித்த கருத்துகளும் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.