அமெரிக்க நாட்டின் நியூயாா்க் மாகாணம், ஷடாக்குவாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்தியாவின் பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி பங்கேற்றார். அப்போது, மேடையில் இருந்த சல்மான் ருஷ்டியை அடையாளம் தெரியாத நபர் கத்தியால் குத்தியுள்ளார். இதனால் அவருக்கு கழுத்து பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், சல்மான் ருஷ்டியின் கண் பார்வை பறிபோகும் நிலை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1988ஆம் ஆண்டு சல்மான் ருஷ்டி எழுதி வெளியிடப்பட்ட நான்காவது நாவலான ‘தி சடானிக் வோ்ஸஸ்’-ல் உள்ள கருத்துக்கள் இஸ்ஸாமியரை புண்படச் செய்ததாக கூறப்பட்டது. இதையடுத்து, ஈரானின் அப்போதைய தலைமை மதகுரு சல்மான் ருஷ்டிக்கு எதிராக ஆணை பிறப்பித்து அவரது தலைக்கு 3 மில்லியன் டாலா் அறிவித்தார். அதையடுத்து, பிரிட்டன் அரசின் பாதுகாப்பில் ருஷ்டி 9 ஆண்டு காலம் தலைமறைவாக வாழ்ந்து வந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது