சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் ‘நடக்கலாம் வாங்க கோரிக்கை மனுக்களை தாங்க’ என்னும் பெயரில் இன்று அதிகாலை நடைபயிற்சி செல்லும் போது, பொதுமக்களின் இல்லம் தேடி சென்று அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெறும் நடவடிக்கையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் தற்போது ஆறு இடங்களில் மட்டுமே மழை நீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த பணிகளும் விரைவில் நிறைவடையும். மழைநீர் வடிகால் பணிகள் 80 சதவீதத்திற்கும் மேல் நிறைவடைந்து விட்டது. வருகின்ற பருவமழையின்போது சைதாப்பேட்டை பகுதியில் மழை வெள்ள பாதிப்புகள் ஏற்படாது. மேலும், பருவ மழை முடியும் வரை இந்த சிறப்பு காய்ச்சல் முகாம்கள் தொடர்ந்து நடைபெறும்” என்று அவர் தெரிவித்தார்.