உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் முதல் ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில், ஈரானில் தயாரிக்கப்பட்ட ஷாஹெட்-136 காமிகேஸ் வகை 400 டிரோன்கள் மூலம் உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தியதாக அந்த நாட்டின் அதிபர் ஸெலென்ஸ்கி குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார். இதற்கிடையில், ரஷ்ய படைகள் அணு ஆயுத பயிற்சி மேற்கொண்டுள்ளது. இதனை, அந்த நாட்டின் அதிபர் விளாடிமிர் புடின் பார்வையிட்டுள்ளார். இதனால், எந்நேரத்திலும், உக்ரைன் மீது ரஷ்யா அணு ஆயுதத்தை உபயோகப்படுத்தலாம் என்ற அச்சம் எழுதுள்ளது. இந்த சோதனையில், பாலிஸ்டிக் மற்றும் க்ரூஸ் ஏவுகணை சோதனை, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை மற்றும் பல பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.