அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த சில தினங்களாகவே வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த நிலையில், இறுதியாக கடந்த வாரம் சரிந்த இந்திய ரூபாய் மதிப்பு, இன்று மேலும் சரிந்துள்ளது. அதன்படி, நேற்று ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.81.90 ஆக இருந்த நிலையில், இன்று காலை மேலும் 32 பைசா வீழ்ச்சியடைந்து ரூ.82.22 சரிந்துள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைவதற்கு வெளிநாட்டுச் சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு, உள்நாட்டு பங்குகளின் முடக்கம், கச்சா எண்ணெய் விலை ஆகியவை காரணங்களாக சொல்லப்படுகிறது. மேலும், கடந்த செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.79.87ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.