தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று பேரணி நடத்த ஆர்.எஸ்.எஸ். திட்டமிருந்தது. ஆனால், காவல்துறை அனுமதி மறுத்ததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி நாளை பேரணி நடத்த காவல்துறை அனுமதி வழங்கியது. அதேநேரத்தில் இது தொடர்பான வழக்கில் நேற்றைய தீர்ப்பில், பேரணியை உள் அரங்கிலோ அல்லது நான்கு சுவர்களுக்குள்ளோ நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட சில நிபந்தனைகளை நீதிமன்றம் குறிப்பிட்டு இருந்தது. இந்த நிலையில் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவிருப்பதாகவும், எனவே நாளை நடக்கவிருந்த ஆர்.எஸ்.எஸ். பேரணி ஒத்திவைக்கப்படுவதாக ஆர்.எஸ்.எஸ். தென் மண்டலத் தலைவர் வன்னியராஜன் கூறியுள்ளார்.