வேலூர் மாநகராட்சியில் பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்களுக்கு ரூ. 500 அபராதம் என வேலூர் மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. அதைத்தொடர்ந்து, குப்பை கொட்டுவதை வீடியோ ஆதாரத்தோடு கொடுப்பவர்களுக்கு ரூ.200 சன்மானம் அளிக்கப்படும், குப்பைகளை தரம் பிரித்து வழங்காத வீடுகளுக்கு ரூ.100 அபராதமும், வணிக நிறுவனங்களுக்கு ரூ.500 அபராதமும், வணிக வளாகங்களுக்கு ரூ.1000 அபராதமும் விதிக்கப்படும் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது. காலி மனைகளில் குப்பை கொட்டினால் ரூ.200 அபராதமும், வீட்டில் உள்ள குப்பைகளை வெளியே வைத்து எரித்தால் ரூ.100 அபராதமும், வணிக நிறுவனங்களுக்கு ரூ.200 அபராதமாக வசூலிக்கப்படும் என்று மாநகராட்சி அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.