பெங்களூரு : கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி ஜனதா தளம் (எஸ்) கட்சியின் தலைவர் குமாரசாமி பஞ்சரத்னா யாத்திரையை நடத்தி வருகிறார். குமாரசாமி பேசியதாவது: விவசாயிகள் கடன்காரர்களாக இருக்கக்கூடாது. இதற்காக நான் எனது பஞ்சரத்னா திட்டத்தில் திட்டங்களைச் சேர்த்துள்ளேன். ஒவ்வொரு ஆண்டும் பருவமழை காலம் தொடங்குவதற்கு முன்பு உழவு பணிகளை மேற்கொள்ள ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் வீதம் அதிகபட்சமாக 10 ஏக்கர் வரை ரூ.1 லட்சம் வழங்கப்படும்.
விவசாயிகளின் மகன்களுக்கு யாரும் பெண் கொடுப்பது இல்லை என்றும், இதற்கு ஏதாவது வழி காண வேண்டும் என்றும் கோரி என்னிடம் விவசாயிகள் பலர் மனு கொடுத்தனர். கர்நாடகத்தில் ஜனதா தளம் (எஸ்) ஆட்சி அமைந்தால் விவசாயிகளின் மகன்களை திருமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கு ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கப்படும். இந்த திட்டத்திற்கு தேவையான நிதி எவ்வளவு என்று கணக்கிட்டு அதை ஒதுக்குவேன் என தெரிவித்தார்.