புதுச்சேரி : புதுவை அரசு மீன்வளத்துறை மூலம் ஆண்டுதோறும் மீன்பிடி தடைக்கால நிவாரணமாக ரூ.5 ஆயிரத்து 500 வழங்கப்படும். இந்த தொகையை ரூ.6 ஆயிரத்து 500 ஆக உயர்த்தி 18 ஆயிரத்து 298 மீனவ குடும்பங்களுக்கு ரூ.11 கோடியே 89 லட்சத்து 37 ஆயிரம் வழங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த உயர்த்தப்பட்ட தடை கால நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி சட்டசபையில் நடந்தது. முதல்வர் ரங்கசாமி மீனவர்களுக்கு தடைகால நிவாரணம் வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த தொகையை புதுவையில் 9 ஆயிரத்து 355, காரைக்காலில் 3 ஆயிரத்து 380, ஏனாமில் 5 ஆயிரத்து 48 குடும்பங்கள் என மொத்தம் 17 ஆயிரத்து 763 குடும்பங்களுக்கு அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.