day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

பத்திரிகையாளர்களுக்கு மாதம் ரூ.10,000/- ஓய்வூதியம்

பத்திரிகையாளர்களுக்கு மாதம் ரூ.10,000/- ஓய்வூதியம்

சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் பத்திரிகைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற 41 பத்திரிகையாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.10,000/- ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 7 ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்களுக்கு ஆணைகளை வழங்கினார். முன்னதாக கொரோனா காலகட்டத்தில் முன்களப் பணியாளர்களாக அறிவிக்கப்பட்ட பத்திரிகையாளர்களின் பணியினை சிறப்பிக்கும் வகையில் 2021-22ஆம் ஆண்டிற்கான செய்தி மற்றும் விளம்பரத் துறை மானியக் கோரிக்கையில், பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும், அரசு சார்பில் மாதந்தோறும் ரூ.10,000/- ஓய்வூதியம் வழங்கப்பட்டும் என்றும் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!