ராஜமௌலி இயக்கத்தில் தெலுங்கின் முன்னணி நடிகர்களான ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இணைந்து நடித்த படம் ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் வெளியாகி பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப்பெற்றதுடன் வணிக ரீதியாகவும் நல்ல வசூலை பார்த்தது. இந்த நிலையில், பிரபல ஹாலிவுட் பத்திரிகை இந்த ஆண்டு ஆஸ்கார் விருது பெரும் திரைப்படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், ஆஸ்கர் விருது பட்டியலில் இடம்பெறும் ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தில், நடிகர்கள் ராம் சரணுக்கு சிறந்த நடிகர், ஜூனியர் என்.டி.ஆர். சிறந்த துணை நடிகர், ராஜமவுலி சிறந்த இயக்குனருக்கான விருது கிடைக்கலாம் என்று யூகிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த திரைப்படத்தின் ரசிகர்களுடன் தெலுங்கு திரையுலகமே மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளது. இதையடுத்து, RRR For Oscar என்ற ஹாஸ்டேக்கும் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.