டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை எட்டிவிட்டது. இதில் சிட்னியில் நாளை நடைபெறும் முதலாவது அரைஇறுதி போட்டியில் நியூசிலாந்து- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. மற்றொரு போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் நாளை மறுதினம் அடிலெய்டில் எதிர்கொள்கின்றன. அடிலெய்டில் இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்த நிலையில் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு வலது கையில் காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சிறிது நேரம் ஓய்வெடுத்த ரோகித் சர்மா பின்னர் மீண்டும் தனது பயிற்சியை தொடங்கினார். இந்த காயம் காரணமாக அரையிறுதி போட்டியில் விளையாட அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என கூறப்படுகிறது.