இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் லேவர் கோப்பை தொடரில் தனது கடைசி ஆட்டத்தை ரோஜர் பெடரர் ஆடினார். இதில் ஐரோப்பிய அணியில் இடம்பெற்றுள்ள ரோஜர் பெடரர், இரட்டையர் பிரிவில் ரபேல் நடாலுடன் இணைந்து அமெரிக்காவின் பிரான்சிஸ் டியாபோ-–ஜாக் சாக் இணையுடன் மோதினார். இந்த, ரோஜர் பெடரர்- ரபேல் நடால் இணை 6-4, 6-7 (2-7), 9-11 என்ற செட் கணக்கில் டியாபோ-–ஜாக்சாக் இணையிடம் தோல்வியடைந்தனர். இதையடுத்து ரோஜர் பெடரர் கண்ணீருடன் விடை பெற்றார். 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர் சுவிட்சர்லாந்த் நாட்டைச் சேர்ந்த ரோஜர் பெடரர் என்பது குறிப்பிடத்தக்கது.