நடிகர் மாதவன் முதன்முதலில் எழுதி, இயக்கி இருக்கும் திரைப்படம் ’ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’. இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை படத்தின் கருவாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் வெளிவந்த ஜூலை 1ஆம் தேதி முதலே நேர்மறையான விமர்சனங்களையே பெற்றுவருகிறது. இந்த திரைப்படத்தில், சிம்ரன், ரவி ராகவேந்திரா, மிஷா கோஷல் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த நிலையில், ராக்கெட்ரி வரும் 26ஆம் தேதி முதல் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது என்ற தகவல் அமேசானின் டுவிட்டர் தளத்தில் வெளியாகியுள்ளது.