ஜெனீவா: சீனாவில் உருமாறிய ஒமைக்ரான் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இதனால் சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பான் நாடுகள் கொரோனா பரிசோதனை சான்றிதழை கட்டாயம் ஆக்கி உள்ளன.
இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் ஜெனீவாவில் காணொலிக் காட்சி வழியாக பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், சீனாவில் தொற்று பரவல் மிகவும் அதிகரித்துள்ளது. அங்கிருந்து முழுமையான தரவுகள் இல்லை. இந்த நிலையில் சில நாடுகள் தங்கள் குடிமக்களைப் பாதுகாக்கும் என்று நம்பி எடுக்கிற நடவடிக்கைகள் சரியானவை, புரிந்துகொள்ளத் தக்கவை என்று தெரிவித்துள்ளார்.