இந்தியாவில் அண்மை காலமாக நாய்கள் மனிதர்களை கடிக்கும் சம்பவம் தொடர்பாக அதிக செய்திகள் ஊடகங்கள் பதிவாகி வருகிறது. இந்த நிலையில், நாடு முழுவதும் 303 மாவட்டங்களில் 31 ஆயிரத்துக்கும் அதிகமானவா்களிடம் தனியார் அமைப்பு நடத்திய கருத்து கேட்பின்படி, தெரு நாய் அல்லது வளா்ப்பு நாய்கடிக்கு 10-ல் 6 போ் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் அதில், தெரு நாய்களால் 56% பேரும், வளா்ப்பு நாய்களால் 31% பேரும் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்து கணிப்பு நாய் கடி குறித்து அச்சமடைந்துள்ளவர்களை மேலும் கவலைக்குள்ளாக்கியுள்ளது.