ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை (ரெப்போ) உயர்த்துவதாக தற்போதைய அதன் ஆளுநராக சக்திகாந்த தாஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி, ரெப்போ வட்டி விகிதம் 0.50 சதவிகிதம் உயந்து 4.9 சதவிகிதத்திலிருந்து 5.4 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இதனால், ரெப்போ வட்டி விகிதம் கடந்த இரண்டு மாதங்களில், தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக இப்போது உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.