ஜார்கண்ட் மாநிலம் லோதர்டாஹா மாவட்டத்தில் பண்டா கிராமத்தை சேர்ந்த சந்தீப் ஒரான் என்பவரும் அதே பகுதியை சேர்ந்த குஷன் என்ற பெண்ணும் கடந்த 3 வருடங்களாக திருமணம் ஆகாமல் லிவிங் டுகெதர் முறையில் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் குழந்தையும் உள்ளது. இதனிடையே சந்தீப் ஒரான் கடந்த சில மாதங்களுக்கு முன் மேற்கு வங்காளத்தில் உள்ள செங்கல் சூளைக்கு வேலைக்கு சென்றபோது அங்கு பணிபுரியும் ஸ்வாதி என்ற இளம்பெண்ணுடன் காதல் ஏற்பட்டுள்ளது. பின்னர், சொந்த ஊர் திரும்பியும் சந்தீப்க்கு ஸ்வாதிக்கும் காதல் தொடந்துள்ளது. இதற்கு கிராம மக்கள், குஷன் மற்றும் ஸ்வாதி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து கிராம பஞ்சாயத்தில் விசாரணை நடைபெற்று இருவரையும் திருமணம் செய்ய வேண்டுமென்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஒரே நேரத்தில் இரு பெண்களை சந்தீப் கிராம மக்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். “இதுகுறித்து சந்தீப் கூறுகையில், “இரு பெண்களை திருமணம் செய்துகொள்வது சட்டரீதியாக பிரச்சினையை ஏற்படுத்தலாம். ஆனால், நான் குஷன் மற்றும் ஸ்வாதி இருவரையும் காதலிக்கிறேன். இருவரையும் என்னால் விட முடியாது என்று கூறியுள்ளார். இவரும் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் பார்த்து இருப்பார்போலேயே…