தமிழ்நாட்டில் உள்ள பத்திரப்பதிவு சார்பதிவாளர் அலுவலகங்களில் அதிகரித்து வரும் ஆவணப்பதிவு எண்ணிக்கையை சமாளிக்க புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளது தமிழக பத்திரப்பதிவுத்துறை. அதன்படி, அவசர தேவைக்காக குறுகிய கால அவகாசத்தில் ஆவணங்களை பதிவு செய்ய விரும்புவோரின் “அவசர முன்பதிவு திட்டம்” மூலம் ஆவணங்களை பதிவு செய்துகொள்ளலாம் என்ற நடைமுறையை இன்று முதல் தொடங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் அதிக பத்திரப்பதிவு நடக்கும் முதல் 100 சார் பதிவாளர் அலுவலகங்களில், முதற்கட்டமாக நாள் ஒன்றுக்கு 10 பேர் வீதம் அவசர முன்பதிவு திட்டம் கீழ் ஆவணங்களை முன்பதிவு செய்து பதிவு செய்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு ரூ.5000 கட்டணமாக செலுத்துவதன் மூலம் குறுகிய காலத்தில் பத்திரப்பதிவு செய்துக்கொள்ளலாம் என பத்திரப்பதிவுத்துறை குறிப்பிட்டுள்ளது.