தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்திய வங்கக் கடல் பகுதியில் நேற்று முன்தினம் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அதையொட்டி தமிழகம் மற்றும் புதுவையில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வங்கக் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி சற்று வலுவடைந்து தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது. இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை அதிகாலை தமிழகம் – புதுவை இடையே கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தொிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததையொட்டி, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இன்று காலை முதல் கனமழையும், ஒருசில மாவட்டங்களில் விட்டு, விட்டும் மழை பெய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.எனவே, வட தமிழக கடலோர பகுதிகளுக்கு இன்று ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.