வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், சிட்ரங் புயலாக வலுவடைந்துள்ளது. சிட்ரங் புயல் வங்கதேசத்தில் டிங்கோனா மற்றும் சாண்ட்விப் இடையே பரிசால் பகுதிக்கு அருகில் இந்திய நேரப்படி நேற்றிரவு 9.30 மணி முதல் 11.30 மணிக்கு இடையே சித்ரகாங் புயல் கரையைக் கடந்தது. இந்த புயல் மேலும் வலுவிழந்து வடகிழக்கு மாநிலங்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இந்த புயலின் தாக்கத்தினால், அஸ்ஸாம், மேகாலயா, மிசோரம் மற்றும் திரிபுரா ஆகிய வடகிழக்கு மாநிலங்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, புயலால் ஏற்படக்கூடிய பாதிப்பை மேற்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அந்த மாநில அரசு சார்பில் செய்யப்பட்டுள்ளது.