தமிழகத்தின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (ஆகஸ்ட் மாதம் 3ஆம் தேதி) தேனி, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. நீலகிரி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, நெல்லை, குமரி, மதுரை, விருதுநகர் மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், சென்னையில் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது.