வாஷிங்டன்: அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் : இந்தியாவில் உள்ள எங்களுடைய தூதரகம் மற்றும் தூதரக அதிகாரிகள், 2022 ஒற்றை நிதியாண்டில் மாணவர்களுக்கு விசா வழங்கியதில் இதுவரை இல்லாத வகையில் சாதனை படைத்து உள்ளது. இதன்படி, நாங்கள் ஏறக்குறைய 1.25 இந்திய மாணவர்களுக்கு விசா அனுமதி வழங்கி இருக்கிறோம் என அவர் கூறியுள்ளார். சில விண்ணப்பதாரர்களின் கோரிக்கையான நீட்டிக்கப்பட்ட விசாக்களை பெறுவதில் காலதாமதம் ஏற்படுகிறது என ஏற்று கொள்கிறோம்.
அமெரிக்க தூதரக மூத்த அதிகாரி ஒருவர் 2022-ம் ஆண்டு நவம்பரில் கூறும்போது, 2023-ம் ஆண்டுக்குள் விசாக்களை பெறுவதில் சீனாவை இந்தியா மிஞ்சி விடும். மெக்சிகோவுக்கு அடுத்து அதிக விசாக்களை பெறும் நாடுகளின் வரிசையில் இந்தியா 2-வது இடம் பிடிக்க கூடும் என்று கூறினார். விசா பெறுவதற்கான காத்திருப்பு நேரம் குறைவதற்காக, எச் மற்றும் எல் பணியாளர் விசாக்களை பெறும் விண்ணப்பதாரர்களின் வசதிக்காக 1 லட்சம் வாய்ப்பிடங்கள் திறக்கப்பட்டு உள்ளன என்று தெரிவித்துள்ளார்.