கூகுள், ஆல்ஃபபெட் இங்க் நிறுவனங்களின் சிஇஓ சுந்தர் பிச்சை “நான் எங்கு சென்றாலும் எனது இந்திய அடையாளத்தை சுமந்து செல்கிறேன்” என்று கூறியுள்ளார். சுந்தர் ப்ச்சைக்கு இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டிருந்தது.அந்த விருதை அவர் நேரில் பெற்றுக் கொள்ள இயலவில்லை. இதனால், விருதை அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சாந்து, சுந்தர் பிச்சையிடம் வழங்கினார்.
விருதைப் பெற்றுக் கொண்டு பேசிய சுந்தர் பிச்சை: “இந்திய அரசுக்கும், இந்திய மக்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு மிகப்பெரிய கவுரவத்தை சேர்த்துள்ளீர்கள். என்னை உருவாக்கிய தேசத்திடம் இருந்து எனக்கு இந்த விருது கிடைத்துள்ளது. இந்தியா எனது ஓர் அங்கம். நான் எங்கு சென்றாலும் அந்த அடையாளத்தை எடுத்துச் செல்கிறேன். என் குடும்பத்தினர் கற்றலுக்கும் ஞானத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்தனர். நான் எனது வாய்ப்புகளைத் தேடிப் பயணிக்க என் பெற்றோர் நிறைய தியாகம் செய்தனர். அப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்ததில் எனக்கு மகிழ்ச்சி” என்றார். இந்து விருது வழங்கும்போது சான் ஃப்ரான்சிஸ்கோ தூதரகத்தின் அதிகாரி டிவி நாகேந்திர பிரசாத் உடன் இருந்தார்.