தமிழ்நாடு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு என தனித்துறை அமைக்க வேண்டும். நிலுவையில் உள்ள 31 சதவீத அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும். ஓய்வூதியம் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான ஊழியர்கள் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது, பொதுமக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களை உதிரியாக வழங்குவதால் விற்பனைக்காக கையாளும் பொழுது பொருட்கள் கீழே சிந்துவதால் விலை குறைவு ஏற்படுவதாகவும் இதனை தவிர்க்க பேக்கிங் முறையை கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.