கர்நாடக மாநிலம் பெங்களூருவில் விருது வழங்கும் விழா கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்றுள்ளது. இதில் இந்திய திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு விருதுகளை பெற்றிருந்தனர். இதில், தமிழ் சினிமா பிரபலங்களான நடிகர் கமல்ஹாசன், சிலம்பரசன், சிவகார்த்திகேயன் போன்றவர்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்த நிலையில், இதுத்தொடர்பான புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்தி நடிகர் ரன்வீர் சிங் வெளியிட்டுள்ளார். அதில், நடிகர் கமல்ஹாசனின் ஆசி பெருவது போன்ற புகைப்படத்துடன், அவரின் அருகில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ள ரன் வீர் ‘தி ஐகான்’ என குறிப்பிட்டுள்ளார். மேலும், அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே உள்ளிட்டோருடன் எடுத்துக்கொண்ட படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.