வன்னியர் இடஒதுக்கீட்டுக்காக உயிரிழந்தவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, “வன்னியர் 10.50% உள் இடஒதுக்கீட்டை மீட்டெடுப்பதில் இதுவரை என்ன நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது; இப்போது என்ன நடக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கிறது; இனி நடக்கப் போவதும் நன்றாகவே நடக்கும். நமக்கான சமூகநீதியை நாம் நிச்சயமாக வென்றெடுப்போம்”! என பாமக நிறுவனர் ராமதாஸ் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். முன்னதாக “வன்னியர் இடஒதுக்கீட்டுப் போரில் துப்பாக்கி குண்டுகளை மார்பில் தாங்கி இன்னுயிர் ஈந்த 21 ஈகியர்களுக்கும் அவர்களின் 35ஆவது நினைவுநாளில் வீரவணக்கம் செலுத்துகிறேன். அவர்களின் தியாகத்திற்கு இந்த உலகில் ஈடு இணையில்லை. அவர்களின் தியாகத்தை எந்நாளும் போற்றுவோம்”! என்றும் அவர் பதிவிட்டிருந்தார்.