நடிகர் ரஜினிகாந்தின் மகளும் பிரபல தயாரிப்பாளர், இயக்குநருமாகிய சௌந்தர்யா ரஜினிகாந்த்துக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சௌந்தர்யா, “கடவுளின் கருணையாலும், எங்களின் பெற்றோர்களின் ஆசிர்வாதத்தாலும் எனக்கு செப்டம்பர் 11ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தைக்கு ‘வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி’ எனப் பெயரிட்டுள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, சௌந்தர்யாவுக்கு திரை பிரபலங்கள் தெரிவித்துவருகின்றனர். முன்னதாக, சௌந்தர்யாவுக்கு வேத் என்ற மகன் இருக்கிறார்.