நடிகர் மாதவன் முதன்முதலில் எழுதி, இயக்கி இருக்கும் திரைப்படம் ’ராக்கெட்ரி’. ஆராய்ச்சியாளர் நம்பி நாராயணனின் வாழ்க்கையை படத்தின் கருவாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் வெளிவந்த 1ஆம் தேதி முதலே நேர்மறையான விமர்சனங்களையே பெற்றுவருகிறது. இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் ராக்கெட்ரி திரைப்படம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், ’நம் நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி வளர்ச்சிக்காக பல துன்பங்களுக்கு உள்ளாகி தியாகங்கள் செய்து அரும்பாடுபட்ட பத்ம பூஷன் திரு. நம்பி நாராயணன் அவர்களின் வரலாறை மிகத் தத்ரூபமாக நடித்துப் படமாக்கி, இயக்குனராக தனது முதல் படத்திலேயே தலை சிறந்த இயக்குனர்களுக்கு இணையாக தானும் நிரூபித்திருக்கிறார் மாதவன்’. இப்படி ஒரு திரைப்படத்தைக் கொடுத்ததற்காக அவருக்கு என்னுடைய நன்றிகளும், பாராட்டுகளும் என்று கூறியதுடன் ராக்கெட்ரி திரைப்படம் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டும், குறிப்பாக இளைஞர்கள் என்று கூறியுள்ளார்.