தமிழகத்தில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வரும் இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள தமிழக அரசின் தலைமைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் சில இடங்களில் மூடப்படாமல் இருப்பது சாமானிய மக்களுக்கு பாதுகாப்பற்ற நிலையை ஏற்படுத்துகிறது என்றும் மூடப்படாமல் இருக்கும் குழிகளின் முன்பாக எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட வேண்டும் என்பதை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் ஊரக வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் அமுதாவுக்கு தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.