சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றைய தினமும் 2ஆவது நாளாக மழை பெய்து வருகிறது. கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், தி.நகர், புரசைவாக்கம், சைதாப்பேட்டை, அசோக்பில்லர், அயனாவரம், கிண்டி, அடையாறு, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, சிந்தாரிப்பேட்டை, எழும்பூர், புறநகர் பகுதிகளான ஈக்காட்டுத்தாங்கல், ஆலந்தூர், மீனம்பாக்கம், பல்லாவரம், குரோம்பேட்டை, மேடவாக்கம், திருவேற்காடு, காட்டுப்பாக்கம், செம்பரம்பாக்கம், கரையான்சாவடி, பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் கனமழைபெய்து வருகிறது. காலை முதல் மேகமூட்டத்துடன் மந்தமாக இருந்த நிலையில் தற்போது மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. பள்ளி, கல்லூரிகள் முடிந்து மாணவர்கள் வீட்டுக்கு வரும் நேரத்தில் மழை பெய்ததால் மாணவர்கள் நனைத்து கொண்டே செல்லும் நிலை ஏற்பட்டது.