நேஷனல் ஹெரால்டு வழக்கில், சோனியா காந்தியின் மகனும், கேரளா வயநாடு நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி, அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி சுமார் 10 மணி நேரத்துக்கும் மேலாக விளக்கமளித்தார். இதனைத்தொடர்ந்து இன்றும் டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். அமலாக்கத்துறை அதிகாரிகளின் கேள்விகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து ராகுல் காந்தி பதிலளிலிக்கும் பட்சத்தில் அவர் மீதான விசாரணை இன்றுடன் முடிவடையும் என்று கூறப்படுகிறது. முன்னதாக நேற்று போலவே இன்றும் அமலாக்கத்துறை நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியில் உள்ள பல இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன குரல்களை எழுப்பி வருகின்றனர். தவிர, சோனியா காந்தி நேஷனல் ஹெரால்டு வழக்கில் வரும் 23ஆம் தேதி நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.