தமிழகத்தில் உள்ள 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு வரும் செப்டம்பா் மாதத்தில் காலாண்டுத் தோ்வு நடத்தப்படவுள்ள நிலையில் அதற்கான தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித் துறை இயக்ககம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 1 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை காலாண்டுத் தோ்வு நடைபெறும். பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவா்களுக்கு செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை காலாண்டுத் தோ்வு நடைபெறும். அக்டோபர் மாதம் 1 முதல் 5ஆம் தேதி வரை காந்தி ஜெயந்தி, சரஸ்வதி பூஜை உள்ளிட்டவற்றுக்காக விடுமுறை அளிக்கப்படுகிறது. அக்டோபர் 6ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.