புதுச்சேரி மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் வள்ளலாரின் 200வது பிறந்த ஆண்டு, மகாத்மா காந்தியின் 153வது பிறந்த நாள் மற்றும் நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டு நிறைவு ஆகிய விழாக்களை கொண்டாடும் வகையில் நாளை நடத்த இருக்கும் அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டத்திற்கு புதுச்சேரி மாநில காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. மேலும் இந்த ஊர்வலம் அமைதியாக நடைபெற கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.