சென்னை, தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.,பி.டி.எஸ் மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை மருத்துவ இயக்குநரகம் சார்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று வெளியிட்டார். அதன்படி, எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு நாளை மறுநாள் தொடங்குகிறது. 30ஆம் தேதி மாணவர்கள் சேர்க்கையின் முதல் சுற்று முடிவுகள் அறிவிக்கப்படும். அதில் தகுதி பெற்றவர்கள் நவம்பர் 4ஆம் தேதி கல்லூரிகளில் சேர வேண்டும். மேலும், எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் மாணவர்களுக்கான முதலாமாண்டு வகுப்புகள் நவம்பர் 15ஆம் தேதி தொடங்கும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.