தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சார்பில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் 2022-23 முதல் 2026-27 வரைக்கான உயர்த்தபடவுள்ள மின் கட்டணம் குறித்து பொதுமக்களின் கருத்து கேட்பு கூட்டம் நேற்று (ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி) நடந்தது. இதில், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் சந்திரசேகர் தலைமையில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்தனர். 30 நாட்கள் நேரம் நடந்த கருத்துகேட்புக்கு பிறகு, பொதுமக்களின் கருத்துக்கள் ஆலோசித்து மின் கட்டண உயர்வு குறித்து முடிவுகள் வெளியிடப்படும் என மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். மேலும், மின் கட்டண உயர்வு குறித்து, உங்கள் கருத்துக்களை எழுதி அனுப்பலாம் என்றும் பொதுமக்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.