கருணாநிதியின் எழுத்தாற்றலை போற்றும் வகையில் கடலுக்கு நடுவே பேனா சின்னம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு பல்வேறு விதமாக எதிர்ப்பு தெரிவித்துவரும் வகையில், பேனா நினைவு சின்னத்துக்கு எதிராக தமிழக மீனவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இது தொடர்பாக மனுவில் கூறி இருப்பதாவது:- கருணாநிதிக்கு மெரினா கடலில் பேனா நினைவு சின்னம் அமைப்பது தொடர்பாக மீனவர்களின் கருத்தை அறியாமல் இந்த சின்னத்தை அமைக்க அரசு முடிவெடுத்துள்ளது. கடலில் இந்த 134 அடி உயரம் கொண்ட நினைவு சின்னம் அமைப்பது என்பது தவறானது. இயற்கை நீதிக்கு எதிரானது. இந்த நினைவு சின்னம் மற்றும் அதற்கான பாதை கட்டுமானங்கள் அமைப்பதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இதேபோல் இந்த சின்னம் அமைப்பது சி.ஆர்.இசட். மண்டலத்துக்குள் வருவதால்,கடல் வளம் பாதிக்கும் என்பதை அறிந்தும் பொதுப் பணித்துறை அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே பல சூழியலாளர்கள் இந்த விவகாரத்தில் ஆட்சேபனை தெரிவித்தும் அதனை தமிழக அரசு கருத்தில் கொள்ளவில்லை. பேனா நினைவு சின்னத்தை உருவாக்குவதால் அது கடலையே வாழ்வாதாரமாக நம்பி உள்ள 32 மீனவ கிராமங்களை பாதிக்கும். எனவே பேனா நினைவுச் சின்னத்தை வேறு இடத்தில் அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.