சென்னை: தமிழகத்தில் தனியார் பால் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்தி அறிவித்துள்ளன. பால், தயிர் ஆகியவற்றின் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது. ஆவின் நிறுவன பாலுக்கும், தனியார் பாலுக்கும் லிட்டருக்கு ரூ.20 வரை வித்தியாசம் இருந்து வருவதால், கடைகளில் ஆவின் பாலுக்கு தேவை அதிகமாக உள்ளது. ஆனாலும், தனியார் நிறுவன பால் விலை கடந்த ஆண்டு 4 முறை உயர்த்தப்பட்டது.
இந்நிலையில், சில தனியார்பால் நிறுவனங்கள் பால், தயிர் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி உள்ளது. ஒரு நிறுவனம் நேற்றே விலையை உயர்த்தியது. 4 தனியார் நிறுவனங்களில் பால் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.