ஜெர்மனி நாட்டின் எல்மாவ் நகரில் 2 நாட்கள் ஜி-7 மாநாடு நடைபெற்றது. இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்பட 7 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் சிறப்பு விருந்திராக பிரதமர் மோடி கலந்துகொண்டார். பின்பு, பிரதமர் மோடி அங்கிருந்து இன்று ஐக்கிய அரபு அமீரகத்துக்கு செல்கிறார். அங்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் முன்னாள் அதிபர் ஷேக் கஃலிபாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க தற்போதைய அதிபர் ஷேக் முகமது பின் சையது அல் நஹ்யானை சந்திக்கிறார். பின்னர், ஐக்கிய அரபு அமீரகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.