மே மாதம் விட்டுவிட்டு பெய்த கோடை மழைக்காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. இந்த நீர்நிலைகளில் கோடை வெப்பத்தை தணிக்க பலர் குளித்து வருகின்றனர். அதேபோல, கடலூர் அருகே நெல்லிக்குப்பம் பகுதியில் கெடிலம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் கோடை மழை காரணமாக தண்ணீர் தேங்கி உள்ளது. அதில், நேற்று காலை வழக்கம் போல, அந்த பகுதியை சேர்ந்த பெண் பிரியா, சிறுமிகள் மோனிசா, சங்கவி, சுமுதா, காவியா பிரியதர்ஷினி, நவி ஆகிய 7 பேர் குளிக்க சென்றுள்ளனர். அப்போது, குளிக்கும் போது தவறுதலாக தடுப்பணையில் ஆழமான இடத்துக்கு சென்ற சிறுமிகள் உட்பட 7 பேரும் தண்ணீர் அதிகமாக இருந்த இடத்தில் மூழ்கினர். தகவலறிந்து தண்ணீரில் மூழ்கிய 7 பேரும் மீட்கப்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட்னர். ஆனால், 7 பேரும் ஏற்கனவே உயிரிந்ததாக மருத்துவர்கள் தெரித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில், தண்ணீரில் மூழ்கி உயிரிந்தவர்களுக்கு பிரதமர் மோடி மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். குளிக்க சென்ற 7 பேர் உயிரிந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.