கனடா நாட்டில் கைத்துப்பாக்கி விற்பனை, கொள்முதல் மற்றும் பரிமாற்றங்களுக்கு தடை விதிக்கப்பட்டு நேற்று முதல் இந்த உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. இதுகுறித்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குறிப்பிடுக்கையில், கனடா முழுவதும் பெருகி வரும் துப்பாக்கி வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர இந்த அவசர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாக துப்பாக்கிச்சூடு சம்பங்கள் கனடாவில் அதிகரித்துள்ளதால் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவில் துப்பாக்கிகளுக்கு எதிராக மிக முக்கிய நடவடிக்கையை அந்த நாட்டு அரசு எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.