பிரதமர் மோடியின் கனவுத் திட்டங்களில் ஒன்று வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் திட்டம்.
அதன்படி, புதுடில்லி – ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா மற்றும் புதுடில்லி – வாரணாசி இடையில் இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த நிலையில் நாட்டின் 3வது வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த ரயில் குஜராத் தலைநகர் காந்தி நகரில் இருந்து மும்பை சென்ட்ரல் வரை இயக்கப்படுகிறது. இது மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படவுள்ளது. இந்நிகழ்வுக்கு பின்னர் காந்திநகரில் இருந்து அகமதாபாத்துக்கு வந்தே பாரத் ரயிலில் பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டார்.