புதுடெல்லி: பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடினர். இக் கலந்துரையாடலில் மாணவர்களின் கேள்விக்கு பிரதமர் மோடி பதில் அளித்தார். பின்னர் ஒரு மாணவர் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் விமர்சனங்கள் குறித்து கேள்வி எழுப்பியதற்கு , பிரதமர் மோடி அவர் கூறியதாவது:- இந்த கேள்வி பாடத்திட்டத்திற்கு வெளியே உள்ள பகுதி (அவுட் ஆப் சிலபஸ்). விமர்சனம் செய்வதற்கும் குற்றம் சாட்டுவதற்கும் வித்தியாசம் உள்ளது. விமர்சனம் என்பது வளமான ஜனநாயகத்திற்கான சுத்திகரிப்பு யாகம் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. பெற்றோர்கள் மதிப்பெண்களுக்காக குழந்தைகள் மீது தேவையற்ற அழுத்தம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். நீங்கள் கடின உழைப்பாளி மற்றும் நேர்மையானவராக இருந்தால், விமர்சனங்களைப் பற்றி கவலைப்படக்கூடாது. குடும்பத்தின் எதிர்பார்ப்புகள் இயற்கையானது, ஆனால் குடும்பம் சமூக நிலையைப் பார்த்தால், அது ஆரோக்கியமாக இருக்காது. அழுத்தங்களால் சோர்ந்து போகாமல், சிந்திக்க வேண்டும் அதை செயல்படுத்த வேண்டும். நேர மேலாண்மை என்பது தேர்வுக்கு மட்டுமல்ல, வாழ்க்கைக்கும் மிக அவசியமானது. உங்கள் வேலைக்கு மட்டும் முன்னுரிமை கொடுங்கள். உங்கள் அம்மா எப்படி நேரத்தை பயன்படுத்துகிறார் என்று கவனியுங்கள். அதிலிருந்து நீங்கள் உங்கள் நேரத்தை எவ்வாறு திட்டமிடுவது என்பதை தெரிந்து கொள்ளமுடியும்’ என்று கூறியுள்ளார்.