பிரபல இந்தி காமெடி நடிகர் ராஜூ ஸ்ரீவஸ்தவா (58) உயிரிழந்தார். இந்த தகவலை அவரது குடும்பத்தினர் இன்று காலை உறுதி செய்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன் ஜிம்மில் நிலைகுலைந்து விழுந்த ராஜூவை மீட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அவர் இன்று காலை சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். ராஜூ ஸ்ரீவஸ்தவா ஸ்டாண்ட் காமெடி மூலம் பலரின் இதயங்களை கவர்ந்தவர். அவரின் இழப்பு தொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், “ராஜூ ஸ்ரீவஸ்தவா சிரிப்பு, நகைச்சுவை மற்றும் நேர்மறை மூலம் நம் வாழ்க்கையை பிரகாசமாக்கியவர். அவர் மிக விரைவில் நம்மை விட்டு பிரிந்து சென்றாலும், அவரது மேன்மையான நகைச்சுவை திறனால் என்றென்றும், எண்ணற்ற நம் மக்களின் இதயங்களில் தொடர்ந்து வாழ்வார். அவரது மறைவு வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி” என்று பதிவிட்டுள்ளார்.