மதுரை : டெல்லியில் இருந்து இன்று குடியரசு தலைவர் திரெளபதி முர்மு, மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளார். அதன் தொடர்ச்சியாக கோயிலில் நடைபெறும் அன்னதான நிகழ்ச்சியிலும் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு வருகை தரவுள்ள நிலையில் கோவிலை சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. குடியரசு தலைவராக பங்கேற்ற பிறகு தமிழகத்திற்கு முதன்முறையாக வருகை தருவது குறிப்பிடதக்கது.
பின்னர் மதுரையிலிருந்து, கோவை செல்கிறார். கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் இருக்கும் இஷா யோகா மையத்தில், 112 அடி உயர ஆதியோகி சிவன் உள்ளது. அங்கு ஒவ்வொரு ஆண்டும் மகாசிவராத்திரி விழா கொண்டாடப்படுவது வழக்கமாக உள்ளது. எனவே, ஆதியோகி சிலை வளாகத்திற்கு இன்று மாலை வருகை தரும் குடியரசு தலைவர், அங்கு நடைபெறும் சிவராத்திரி விழாவில் கலந்துகொள்கிறார்.