உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் முதல் ரஷ்யா போர் நடத்தி வருகிறது. இந்த போரில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள், உயிருக்கு பயந்து அண்டை நாடுகளுக்கு அகதிகளாக சென்றுள்ளனர். நாட்டைவிட்டு ஒருசில உடமைகளுடன் மட்டுமே சென்றுள்ள மக்கள் பல்வேறு துயரங்களை கடந்தே உயிர் பிழைத்திருக்க போராடி வருகின்றனர். இந்த நிலையில், உக்ரைனில் ரஷ்யா ஏற்படுத்திய போர் தாக்குதல்கள் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை உலகிற்கு எடுத்துரைக்கும் பொருட்டு அமெரிக்காவின் பிரபல ‘வோக்’ மாத இதழ் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் அவரது மனைவியை இணைத்து பேட்டி எடுத்துள்ளது. இதற்கிடையில் மாத இதழின் அட்டைப்படத்தில் அதிபரின் மனைவி புகைப்படங்களும் கட்டூரையில் அதிபர், அவரது மனைவி போஸ் கொடுத்த புகைப்படங்களும் இடம் பெற்றவுள்ளன. இதையடுத்து, வோக் இந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
போர் காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுபோன்ற புகைப்படங்கள் மூலமே உக்ரைனின் நிலையை உலகிற்கு எடுத்து சொல்ல வேண்டுமா? இது போன்ற போட்டோ ஷூட் தேவையா என ஒரு சாராரும், இந்த புகைப்படங்கள் ரஷ்யாவை எதிர்த்து நிற்கும் உக்ரைனின் நிலையை எடுத்துக்காட்டுவதுடன் நம்பிக்கை அளிப்பதாக மற்றொரு சாராரும் பேசி வருகின்றனர்.