சென்னையில் நடந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய பி அணி வெண்கலப் பதக்கம் வெல்ல முக்கிய பங்காற்றிய பிரக்ஞானந்தா தற்போது, அமெரிக்க நாட்டின் மியாமியில் FTX கிரிப்டோ கோப்பை செஸ் போட்டியில் பங்கேற்றுள்ளார். இந்த போட்டியில் பிரக்ஞானந்தா அமெரிக்க வீரர் ஹான்ஸ் நீமனை 64வது காய் நகர்த்தலில் வீழ்த்தி வெற்றிப்பெற்றார். இந்த போட்டியில், தொடர்ச்சியாக இது பிரக்ஞானந்தாவின் 3ஆவது வெற்றியாகும்.